A short summary of your project
இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் அமையவிருக்கும் தமிழ்த்துறைக்கு வலு சேர்க்கும் மலேசிய தமிழர்களின் பங்களிப்பு.
Who are you?
மலேசியாவில் பல தலைமுறைகளாக தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைக் காத்துவரும் தமிழ் மக்களின் கூட்டு முயற்சியே இந்த நிதித்திரட்டல் பங்களிப்பு.
Your story
இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், இலண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் அரியணை ஏறும். மேலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இருந்து இலண்டனில் பல்வேறு படிப்புகளுக்கும் வரும் நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழக பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன் மதிப்பெண்களையும் தான் படித்துக்கொண்டிருக்கும் துறைகளில் சேர்க்க முடியும்.
மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழை முதன்மைப்படுத்தி படிக்க முடியும் என்பதால், உலகளாவிய தமிழ்க்கல்விப் பணிகளை பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல முடியும். எனவே, மலேசியாவில் வாழும் தமிழர்கள், இந்த தமிழ்த்துறைக்கு தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி, தமிழ்த்துறை வைப்புநிதியில் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
Where will the money go?
திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் SOAS தமிழ்த்துறையின் நெடுங்கால வைப்புநிதியில் இணைக்கப்படும். இணைப்பு: https://soas.hubbub.net/p/TamilStudies/
Rewards
E-Certificates will be issued to all donors by TamilStudiesUK.
Donors of £1000 or more will be added as TamilStudiesUK's Philanthropists with their photo at the website http://tamilstudiesuk.org/philanthropists/
CONTACT
You can reach us at contact@tamilstudiesuk.org, or our website: www.tamilstudiesuk.org
Our Malaysia Coordinators
- Pon Kogilam
- Suba Nargunan
- Palany Suppiah