International Hindu Youth Forum (IHYF)

A project by: Tamil Studies UK

£202
pledged of £3,000 target
6%
FUNDED
3
USERS
சர்வதேச இந்து இளைஞர் பேரவை (UK)

A short summary of your project

  • சர்வதேச இந்து இளைஞர் பேரவை UK. 

Who are you?

  • எமது மன்றம் 2012 லண்டனிலும், 2013 இலங்கையிலும் ஆரம்பிக்கபட்டது. இவ் அமைப்பின் முக்கிய நோக்கம் எமது சிறார்களையும், இளைஞர்களையும் சைவத்திலும் , தமிழிலும், கலைத்துறையிலும் ஈடுபடுத்தும் நோக்கும். அதற்க்காகவே ஒவ்வொரு ஆண்டும் சமய பேச்சுப்போட்டி, திருமுறை ஓதல் போட்டிகளை நடாத்துவதுடன் மார்கழி மாதத்தில் “மார்கழி உற்சவம்” என்னும் நிகழ்வில் பரிசுகளையும் வழங்குவதுடன் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றும் வகையில் கலை நிகழ்வையும் நிகழ்த்தி வருகின்றோம். அத்துடன் மூத்தோர்களையும், கலைஞர்களையும் கெளரவித்தும் வருகின்றோம். அதே போன்று இலங்கையனைத்திலும்  ஓவ்வொரு ஆண்டும் “இந்து இளைஞர் மாநாட்டையும்” நடாத்தி வருகின்றோம். இலங்கையில் வசதிகள் அற்ற மாணவர்களுக்கும், குடும்பங்களுக்கும் பல உதவிகளையும் சமூக பணிகளையும் செய்து வருகின்றோம். முக்கியமாக குறிப்பிட வேண்டியது இளைஞர்களால் இம்மன்றம் நிகழ்த்தப்படுவது மிக சிறப்புக்குரியது.

Where will the money go?

  • இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழியும் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழக பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன் மதிப்பெண்களையும் தான் படித்துக்கொண்டிருக்கும் துறைகளில் சேர்க்க முடியும்.
  • மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழை முதன்மைப்படுத்தி படிக்க முடியும் என்பதால், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் ஐரோப்பாவிலே தமிழில் உயர்கல்வி கற்க முடியும். இது ஐரோப்பாவில் இயங்கிவரும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் பாடசாலைக்கு எதிர்காலத்தில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய துறையாக அமையும். எனவே, கரோ வாழும் தமிழர்கள், இந்த தமிழ்த்துறைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை வழங்கி, தமிழ்த்துறை வைப்புநிதியில் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
  • திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் SOAS தமிழ்த்துறையின் நெடுங்கால வைப்புநிதியில் இணைக்கப்படும்.
  • இணைப்பு: https://soas.hubbub.net/p/TamilStudies/

Rewards

  • E-Certificate

MAGES

CONTACT US

  • நிறுவனர் சர்வதேச இந்து இளைஞர் பேரவை. 
  •     சி. கணேஸ்குமார்
  • தலைவி 
  •     செல்வி யெசிக்கா
  • Mobile 
  •     074 1135 4315
  •     079 5599 9495
  •     075 1415 2827
  • Email - மின்னஞ்சல் 
  •     ihyforum@gmail.com

Help us succeed!

  • இம் முயற்சிக்கு எல்லோரும் உங்களால் இயன்ற பங்களிப்பை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
  • Please sponsor us and help make this happen.