Fundraising for Tamil Studies by ‘Harrow Tamil Santhi’

A project by: Tamil Studies UK

£803
pledged of £1,500 target
53%
FUNDED
4
USERS
உலகம் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சார்பாக இலண்டன் தமிழ்த்துறைக்கு நன்கொடை

A short summary of your project

  • இலண்டன் பல்கலைக்கழக, SOAS இல் அமையவிருக்கும் தமிழ்த்துறைக்கு ‘கரோ தமிழ் சந்தி’ யின் வழியாக ஆதரவு வழங்கும் நிதித்திரட்டல்.

Who are you?

  • ‘கரோ தமிழ் சந்தி’ என்பது இலண்டனின் கரோ பெருநகரில் கூடும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு.  எமது முக்கிய சிந்தனையாக, வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும் பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும் இசை கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Your story

  • இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழியும் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழக பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன் மதிப்பெண்களையும் தான் படித்துக்கொண்டிருக்கும் துறைகளில் சேர்க்க முடியும்.
  • மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழை முதன்மைப்படுத்தி படிக்க முடியும் என்பதால், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் ஐரோப்பாவிலே தமிழில் உயர்கல்வி கற்க முடியும். இது ஐரோப்பாவில் இயங்கிவரும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் பாடசாலைக்கு எதிர்காலத்தில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய துறையாக அமையும். எனவே, கரோ வாழும் தமிழர்கள், இந்த தமிழ்த்துறைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை வழங்கி, தமிழ்த்துறை வைப்புநிதியில் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
  • திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் SOAS தமிழ்த்துறையின் நெடுங்கால வைப்புநிதியில் இணைக்கப்படும்.
  • இணைப்பு: https://soas.hubbub.net/p/TamilStudies/

Rewards

  • E- Certificate

Find us here

  • Harrow Tamil Santhi, President: நடா சிவராஜா
  • Email - harrowthamilsanthi@gmail.com
  • Mobile - +447555990479
  • Alternatively, you can reach us at contact@tamilstudiesuk.org
  • Our website: www.tamilstudiesuk.org